English   සිංහල   தமிழ்

பணிப்பாளர் சபை

துலான் – தலைவர்

திரு. துலான் டி சில்வா அவர்கள் மூன்று துணை நிறுவனங்களான பெரெண்டினா அபிவிருத்தி சேவைகள் (BDS), பெரெண்டினா நுண்நிதி நிறுவனம் (BMI) மற்றும் பெரெண்டினா தொழில்வள நிறுவனம் (BEC) ஆகியவற்றின் தலைவர் ஆவார். நுண்நிதி துறையில் முன்னோடிகளில் ஒருவரான திரு. டி சில்வா அவர்கள் இலங்கையின் அரச சார்பற்ற நுண்நிதி நிறுவனங்களில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டதும், பெரியதுமான சர்வோதயாவின் சீட்ஸ் (SEEDS) நிறுவனத்தின் முன்னால் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இலங்கையின் பல்வேறுபட்ட செயற்றிட்டங்களில் செயற்பட்டது மட்டுமின்றி, சிரேஷ்ட நுண்நிதி ஆலோசகராக 15 க்கும் மேற்பட்ட ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் பற்பல செயற்றிட்டங்களுக்கு துணைபுரிந்துள்ளார். அவர் தனது முதுமானி பட்டப்படிப்பை அமேரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில், வணிக நிர்வாகத்தில் பெற்றுள்ளதுடன் பிரித்தானிய பட்டைய மேலாண்மை கணக்கியல் நிறுவனத்தின் துணை அங்கத்தவருமாவார்.

அநுர - பணிப்பாளர்

திரு. அநுர அத்தபத்து பெரெண்டினா தொழில்வள நிலையத்தின் (BEC) உருவாக்க பணிப்பாளர்களில் ஒருவராவார். அதுமட்டுமன்றி பெரெண்டினா நுண்நிதி நிறுவனம் (BMI) மற்றும் பெரெண்டினா அபிவிருத்தி சேவைகள் (BDS) என்பவற்றின் தொடக்கத்தில் இருந்தே தனது சேவை பங்கை வழங்கி வருகின்றார். நுண்நிதி துறைகளுடன் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தியுடன் தொடர்பான சுதேச மற்றும் சர்வதேச நிறுனங்களுங்களுக்கு சுயாதீனமாக ஆலோசனை சேவை வழங்கி வருகின்றார். இலங்கையில் விவசாய விஞ்ஞான பிரிவில் விசேட பட்டபடிப்பை அவர் பூர்த்திச்செய்துள்ளதுடன், பொருளாதார அபிவிருத்தி துறையில் பட்டப்பின் டிப்ளோமா ஒன்றையும் பெற்றுள்ளார். மேலும், வாசிப்பு பல்கலைக்கழகத்தால் அவருக்கு விவசாய முன்னேற்றம் மற்றும் கிராமிய அபிவிருத்தி துறையில் சான்றிதல் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர் பிரித்தானிய லிங்கன் பல்கலைக்கழகத்தில் வியாபார பரிபாலன துறையில் முதுமானி படிப்பையும் முடித்துள்ளார்.

ஜகத் - பணிப்பாளர்

பெரெண்டினா தொழில்வள நிலையத்தின் (BEC) உருவாக்க பணிப்பாளர்களில் ஜகத் கொடகந்தவும் ஒருவராவார். அதுமட்டுமன்றி பெரெண்டினா அபிவிருத்தி சேவைகள் (BDS) மற்றும் பெரெண்டினா நுண்நிதி நிறுவனம் (BMI) என்பவற்றின் தொடக்கத்தில் இருந்தே தனது சேவை பங்களிப்பை வழங்கி வருகின்றார். இவர் தொழில்முயற்சி அபிவிருத்தியுடன் தொடர்பான சுதேச மற்றும் சர்வதேச நிறுனங்களுங்களுக்கு சுயாதீனமாக ஆலோசனை சேவை வழங்கி வருகின்றார். இலங்கையில், விவசாய விஞ்ஞான பிரிவில் விசேட பட்டபடிப்பை அவர் பூர்த்திச்செய்துள்ளதுடன், பொருளாதார முகாமைத்துவ துறையில் பட்டப்பின் டிப்ளோமா ஒன்றையும் வியாபார முகாமைத்துவ தேசிய நிறுவனத்திடமிருந்து (NIBM) பெற்றுள்ளார்.


எங்கள் உத்தியோகத்தர்கள்


Hemantha Harischandra
General Manager
Head Office

Charith
District Manager
Kegalle

Thinesh
District Manager
Batticaloa

Supun
District Manager
Puttalam

S. Chandrakumar
District Manager
Trincomale

K.Dinesh Chandru
District Manager
Mullaitivu

G.K.JANAK SANJEEWA
District Manager
Anuradhapura