English   සිංහල   தமிழ்



இதுவரை 250 க்கு மேற்பட்ட நிறுவனங்களுடன் BEC சிறந்த உறவை பேணி வருவதுடன், 15,000 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்புகளுக்காக BEC இல் தம்மை பதிவுச்செய்துள்ளார்கள்.


ஒரு தொழில் வழங்கல் நிறுவனமாக மாத்திரம் தொழிட்படாமல் அதற்கும் மேலாக மேலும் பல சேவைகளை நாம் உங்களுக்காக வழங்கி வருகின்றோம்.....


  • இலங்கையில் 8 மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள BEC நிறுவனம் தமது கிளைகளினூடாக, திறனாக நிறுவனங்களுக்கு திறமையானதும் திறன் கொண்டதுமான பின்தங்கிய மற்றும் பெருந்தோட்ட பிரதேசங்களிலிருந்து ஊழியர் படைகளை வழங்கி வருகின்றது.
  • இளைஞர் யுவதிகளின் கல்வி மற்றும் தொழில் ரீதியான தகைமைகளை கருத்திற்கொண்டு BEC அவற்றை நன்கு ஆராய்ந்து, மிகச்சிறந்த தொழில் வாய்ப்புகளுடன் இணைப்பதுடன், இதன் மூலம் ஊழியர்களின் மந்தமான செயற்பாட்டை குறைப்பதுடன் வெளியேற்றத்தையும் கட்டுப்படுத்துகின்றது.
  • தொழில் வழிகாட்டல்கள், தலைமைத்துவ பயிற்சிகள் மற்றும் ஆளுமை விருத்தி நிகழ்ச்சிகளின் மூலம் இளைஞர் யுவதிகளின் தொழில் திறனை அதிகரித்தல் BEC இன் நோக்கமாகும்.
  • தொழில் வாய்ப்பு உறுதியளிகப்பட்ட வறிய இளைஞர் யுவதிகளுக்கு அக்குறிப்பிட்ட தொழிலுக்கான போதிய திறனை வளர்த்துக்கொள்வதற்காக விசேட தொழிற்பயிற்சிளை BEC வழங்கி வருகின்றது.
  • BEC நிறுவனமானது, வறிய மற்றும் மாற்று திறனாளி இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகளுக்காக நிதியுதவிகளையும் வழங்குகின்றது.

தொழில் வழங்குனர்கள் பெரும் பயன்கள்


  நீங்கள் BEC நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் இணையும் போது கீழ் காணும் பயன்களை பெறுவீர்கள்.

  • அனைத்து விண்ணப்பதாரிகளும் அவர்களின் கல்வி மற்றும் தொழில் அனுபவத்துக்கேற்ப நன்கு பரிசீலிக்கப்பட்டு தொழில் வெற்றிடங்களுக்கு அனுப்பப்படுவதால் ஊழியர்களின் மந்தமான செயற்பாடு தவிர்க்கப்படுவதுடன் ஊழியர் வெளியேற்றத்தை குறைத்தல்.
  • நிறுவனங்களின் தேவைக்கேற்ப தொடர்ச்சியாக மனிதவளம் வழங்கப்படுதல்.
  • சிறந்த தரவுக்கோவை பேணல் மூலம் தொழில் வழங்குனர் மற்றும் தொழிலாளர் இணைப்பை சரிவர பராமரித்தல்.
  • குறுகிய கால, நீண்ட கால தேவைகளுக்கேற்ற்ப அனுபவமுள்ள அல்லது குறைந்த அனுபவம் கொண்ட தொழிலாளர்களை பெற்றுக் கொடுத்தல்.
  • நிறுவனங்களின் உற்பத்தி தேவைகளுக்கு அமைய அவர்களுடன் கூடினைந்து, துணை ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டு தேவையான தொழிலாளர் படை, இட வசதிகள் மற்றும் களஞ்சிய வசதிகள் என்பவற்றை ஏற்பாடு செய்துகொடுத்தல்.
  • எம்மால் வழங்கப்பட ஊழியர்கள் சிறந்த முறையில் நிறுவனங்களுக்கு தமது பங்களிப்பை வழங்குகின்றனரா என கள ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளை நிறுவனங்களுக்கு வழங்கல.்
  • தொழில் வாய்ப்பு உறுதியளிகப்பட்ட வறிய இளைஞர் யுவதிகளுக்கு அக்குறிப்பிட்ட தொழிலுக்கான போதிய திறனை வளர்த்துக்கொள்வதற்காக விசேட தொழிற்பயிற்சிளை வழங்குதல்.


தொழிலிணைப்பின் பதிவுகள்


  கடந்த தொழிலிணைப்புகள் அனைத்தையும் BEC நிறுவனம், தனது தரவுக்கோவையில் பேணி வருகின்றது. பதிவுசெய்யப்பட்ட அனைத்து தொழில் வழங்குனர்களாலும் முன்னறிவித்தலுடன் இவற்றை பெற்றுக்கொள்ளலாம்.

BEC இனால் வழங்கபடும் தொழில் துறைகள்


  • நுகர்வோர் / உற்பத்தி தொழிற்சாலைகள்
  • முகாமைத்துவம் / நிர்வாகம் / கணக்கியல் / நிதித்துறை / வங்கி ஊழியர்கள்
  • தேர்ச்சி பெற்ற / பகுதி திறமையான மற்றும் பயிற்றப்படாத தொழிலாளர்கள் - குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில்
  • காற்றுப் பதனிடல் / குளிரூட்டல் / பொறியியல் / கைத்தொழில்
  • வாடிக்கையாளர் சேவை / மக்கள் தொடர்புகள் / காசாளர்கள்
  • உற்பத்தி / தயாரிப்பு / ஆடை தொழிற்சாலைகள் முதலியன
  • கணினியியல்
  • ஹோட்டல் / உணவு வழங்கல் சேவை / உணவு வெதுப்பத்துறை
  • வைத்திய சாலை / மருத்துவ சேவைகள்
  • வெல்டர் / பொருத்துனர் / கொத்தன் / நீர் குழாய் இணைத்தல்
  • மின்னியல்
  • விமானத்துறை
  • பாதுகாப்புச் சேவைகள்
  • கனரக வாகனம் இயக்குதல் மற்றும் உதவியாளர் (அனுமதி பத்திரம் பெற்ற)
  • • தொழிற்சாலை பணியாளர்கள் (ஆண் & பெண்)


தொழிற்சந்தைகள்


தொழில் வெற்றிடம் கொண்ட நிறுவனங்களையும், தொழில் தேடும் இளைஞர் யுவதிகளையும் ஒரே இடத்தில் சந்திக்க வைத்து தொழில் வெற்றிடங்களை நிரப்பும் முகமாக, தான் தொழிற்படும் மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் தொழில் சந்தைகளை வருடத்தில் பலமுறை BEC ஏற்பாடு செய்து வருகின்றது. சில தொழில் சந்தைகளை தனியார் நிறுவனங்களுடன் கூட்டினைந்தும் BEC நடாத்தி வருகின்றது. இத்தகைய தொழில் சந்தைகளில் இளைஞர் யுவதிகள் அவ்விடத்திலேயே வேலை வெற்றிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு சிறந்த தொழில்களில் இணைத்து கொள்ளப்படுகின்றனர். அத்தோடு தொழில் பயிற்ச்சி மற்றும் தொழில் வழிகாட்டல் நிகழ்வுகளோடு இணையும் சந்தர்பங்களும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.




join with us