English   සිංහල   தமிழ்

சமூகம் சார் வணிகம்


சமூகம் சார் வணிகம் என்பது சமூகமய நோக்கங்களை (வறுமையொழிப்பு போன்ற) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் பெற்ற வணிகமாவதுடன், வணிக ரீதியாக இலபகரமானதும், பொருத்தமானதும் நிலைத்து நீடிக்கக் கூடியதாயும் அமையும். BEC இலங்கையில் கிராமப்புற பிரதேசங்களில் காணப்படுகின்ற மக்களை பல்வேறு வகையில் பாதிக்கும் வேலையின்மை, தரமான தண்ணீர் வளங்கள் பற்றாக்குறை, சரியான பாலர் பள்ளி வசதிகள் இல்லாத நிலைமை போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு விடையளிக்கும் நோக்கத்துடன் பல்வேறு சமூகம் சார் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

கிராமப்புர பிரதேசங்களில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கில் தனியார் நிறுவனங்களுடன் கூட்டிணைந்து துணை ஒப்பந்தகளில் கைச்சாத்திட்டு புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பித்தல், கிராமப்புற பகுதிகளில் சமூகம் சார் வணிக செயற்பாடுகளை தொடங்க ஆர்வமாக உள்ள தனியார் துறை நிறுவனங்களுக்கு தேவையான சேவைகளை வழங்குதல் மற்றும் சமூகம் சார் வணிகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுதல் என்பன BEC இனால் சமூகம் சார் வணிகம் தொடர்பாக மேட்கொள்ளபடும் நடவடிக்கைகளாகும்.

தற்போது, கேகாலையில் மட்டும் 15 உற்பத்தி நிலையங்கள் சமூகம் சார் வணிக அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் செயற்படுவதுடன், அதிலே 200 இக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்மணிகள் முழுநேர அல்லது பகுதிநேர தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளில், 22 இக்கும் அதிகமான நிறுவனங்கள் சமூக வணிக முயற்சிகளுக்காக பெரெண்டினாவுடன் கூட்டுசேர்ந்து இயங்கி வந்துள்ளன.


BECன் சமூகம் சார் வணிகம் தொடர்பான மூலோபாயங்கள்


  1. ஒரு சமூகம் சார் வணிக முதலீட்டாளராக தொழிற்படல்
  2. ஏனைய முதலீட்டாளர்களால் ஆரம்பிக்கப்படும் புதிய அல்லது ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் சமூகம் சார் வணிக தொலிற்பாடுகளில் BEC முதலீடு செய்கின்றது. வட்டியல்லா கடன்களை வழங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த, தயாரிப்பு மற்றும் சந்தை விரிவாக்கத்தை ஏற்படுத்த BEC உதவுகின்றது. இத்தகைய முதலீடுகள் வியாபார செயற்பாடு மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் வேறுபடும்.



  3. தனியார் துறை நிறுவனங்களுக்கு கிராமப்புற பிரதேசங்களில் சமூகம் சார் வணிக தொழில்கள் தொடங்க வசதியளித்தல்
  4. BEC கிராமப்புற பிரதேசங்களில் உற்பத்தி மையங்களை அமைக்க தனியார் துறை நிறுவனங்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கின்றது. அவை பின்வருமாறு செயற்படுத்தப்படுகின்றது.



    1. உள்ளூர் பிரதேசங்களில் வளங்கள் கிடைப்பதை பொறுத்து, கிராமப்புற பகுதிகளில் சாத்தியமான வர்த்தக வாய்ப்புகளை அடையாளப்படுத்துகிறது.


    2. கிராமப்புற பகுதிகளில் இந்த வளங்களை கொண்டு புதிய சமூகம் சார் வணிக வாய்ப்புகளை அமைக்க ஆர்வமாக உள்ள நிறுவனங்களை BEC அடையாளப்படுத்துகிறது.


    3. கிராமப்புற பகுதிகளில் சமூகம் சார் வணிக நடவடிக்கைகளை அமைக்க விரும்பும் இந்த நிறுவனங்களுக்கு அனுசரணை சேவைகளை வழங்குகின்றது.(தேவையான தகவல்களை வழங்குதல், ஆரம்ப பேச்சுவார்த்தைகளை நடாத்தல், இயலுமைத் தன்மை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளல் முதலியன)


    4. இப்பிரதேசங்களில் சமூகம் சார் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் இந்த நிறுவனங்களுக்கு பல சலுகைகளை வழங்குகின்றது.




  5. தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன் கூட்டுறவு மற்றும் முகாமைத்துவ குழுக்கள் மூலம் சமூகம் சார் வணிக செயற்பாடுகளை துணை ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டு கொண்டு நடாத்தல்
  6. கிராமப்புற பகுதிகளில் கூட்டுறவு மற்றும் சமூகம் சார்ந்த நிறுவனங்கள் சமூகம் சார் வணிகத்தை அடையாளம் காண்பதற்கும் ஆரம்பிப்பதற்குமான வழிவகைகளை BEC ஏற்படுத்துகின்றது. மற்றும் கிராமப்புற பகுதிகளில் உற்பத்தி மையங்களை தனியார் நிறுவனங்கள் தொடங்க BEC அவர்களுடன் கூட்டிணைவதொடு அத்தகைய நிறுவனங்களை உள்ளூர் கூட்டுறவு மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைக்கிறது. அத்தோடு, இந்த தனியார் நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன், முகாமைதுவ உதவி, பயிற்சி பெற்ற ஊழியர்கள் மற்றும் வியாபார நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கான இடம் போன்ற கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது. இத்தகைய கூட்டுறவு அமைப்புக்கள் தன்னிறைவு அடையும் வரையில் நிதி மற்றும் முகாமைத்துவ உதவிகளையும் BEC வழங்குகின்றது.



  7. உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் சமூகம் சார் வணிகத்தை ஊக்குவிக்க தொழிற்படல்
  8. உள்ளூரிலும், சர்வதேச ரீதியிலும் சமூகம் சார் வணிகம் தொடர்பான உள்ளூர் மற்றும் சர்வதேச விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக சம்பத்தப்பட்ட நிறுவனங்களுடன் BEC இணைந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றது.